மோட்டார் வாகனச் சட்டம் தவறு தண்டனை

மோட்டார் வாகன சட்டம் மற்றும் அபராதம் !!




❣டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் /ரூ.500 அபராதம்.

❣இரு சக்கர வாகனத்தில் அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு (2 பேர்) மேலான நபர்களுடன் சென்றால் /ரூ.2000 அபராதம் மற்றும் 3 மாதங்களுக்கு உரிமம் ரத்து.

❣தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை ஓட்டினால் /ரூ.1000 அபராதம் மற்றும் 3 மாதங்களுக்கு உரிமம் ரத்து.

❣போக்குவரத்திற்க்கு இடையூறு செய்தால் /ரூ.500 அபராதம்.

❣சீட் பெல்ட் அணியாமல் வாகனத்தை ஓட்டினால் /ரூ.1000 அபராதம்.

❣விதி மீறல் (உதாரணம் - செல்போன் பேசிக் கொண்டு ஓட்டுதல்) /ரூ.1000 அபராதம மற்றும் 3 மாதங்களுக்கு  உரிமம் பறிக்கப்படும்.

❣குடிப் போதையில் வண்டி ஓட்டுதல் 
/6 மாதம் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம்.

❣சிறார்கள் வாகனம் இயக்கி தவறு செய்தால் /ரூ.25,000 அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 12 மாதங்களுக்கு மோட்டார் வாகன பதிவு ரத்து செய்யப்படும். அந்த சிறார் 25 வயது ஆகும்வரை, எல்.எல். (Learner license) கூட வாங்க முடியாது. தகுதியற்றவர்கள் பட்டியலில் வைக்கப்படுவார்கள்.

❣விபத்து ஏற்படுத்தினால், /முதல் முறை எனில் 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ5,000 வரை அபராதம் விதிக்கப்படும்; இரண்டாவது முறை என்றால், 1 வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ10,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

❣உரிமம் இல்லதவர்களை வண்டி ஓட்ட அனுமதித்தால் /ரூ.5000 அபராதம்.

❣ஓட்டுநர் தகுதி இழந்தவர்கள் வண்டி ஓட்டினால் /ரூ.10,000 அபராதம்

❣வாகனம் ஓட்டுவதற்கு மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ தகுதியற்றவர்களுக்கு 
/முதல் முறை எனில் ரூ1000; இரண்டாவது முறை எனில், ரூ2,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

❣காப்பீடு இல்லாத வாகனங்களை ஓட்டும் நபர்களுக்கு /முதல் தடவை எனில் 3 மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.2,000 அபராதமும், இண்டாவது முறையெனில் ரூ.4,000 அபராதம் அல்லது 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

❣ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள், உரிமம், காலாவதியாகும் ஒரு வருடம் முன்போ, காலாவதியாகி ஒரு வருடத்திற்கு உள்ளோ எந்த நேரத்திலும் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம். 
ஓட்டுநர் உரிமம் காலாவதியான நாளிலிருந்து ஒரு வருடம் கழித்து புதுப்பிக்க விண்ணப்பித்தால், விண்ணப்பதாரர் மீண்டும் ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

❣அதிவேகத்தில் வண்டி ஓட்டினால்
/முதல் தடவையெனில் ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை அபராதம்; இரண்டாவது முறை எனில் உரிமம் பறிக்கப்படும்.

❣அபாயகரமாக ஓட்டினால் /6 முதல் 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை அபராதம்.

❣ஆபத்து ஏற்படுத்தும் வகையில், அதிவேகத்தில் வண்டி ஓட்டினால், /முதல் முறையெனில் 6 மாதங்கள் முதல் 1 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனை; இரண்டாவது முறையெனில் 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.10,000 வரை அபராதம்.

❣போட்டி போட்டுக் கொண்டு வண்டி ஓட்டுதல் /1 மாதம் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.500 அபராதம்.

❣அனுமதிக்கப்பட்ட அளவை விட வேகமாக வண்டி ஓட்டினால் /டூ வீலர் டிரைவர்கள் ரூ.1,000; நடுத்தர ரக வாகன ஓட்டுநர்கள் ரூ.2,000; கனரக வாகன ஓட்டுநர்கள் ரூ.4,000 அபராதம் செலுத்த வேண்டும்.
Tags
To Top